துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவு கண்டும் மனித உடல்கள் – ஆணும் பெண்ணும் – சஞ்சரிக்கின்றன. இந்த சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது. இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது. பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி