“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரமெல்லாம் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் வேண்டுகோள் எவ்வளவு நன்னோக்கம் கொண்டதோ அதேபோல் அவரின் மொழிகளை பிறநாட்டு மக்களும் அறிந்திடல் பொருட்டு மொழிபெயர்ப்பதும் சிறந்த கவிஞனுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் நியாயம். அந்த வகையில் மகாகவி பாரதியின் கவிதைகள் தமிழிலிருந்து நேரடியாக அரபியில் முனைவர் அ.ஜாகீர் ஹுசைன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு கேலக்ஸி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.