நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந. ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதையின் பொதுப் பாதையிலிருந்து விலகித் தனி வழியே நடப்பவர். அவரது கவிதைகளும் பிரத்தியேகமானவையாகத் தனித்து நிற்பவை. தோற்றத்தில் எளிமையாகத் தென்படும் கவிதைகள் ஆழத்தில் பல படிநிலைகள் கொண்டவை. தொன்மமும் புராணமும் இலக்கியச் செறிவும் இயைந்த மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் புதிர்களைப் போன்றவை. அவிழ்க்கப்பட்டால் புதிய காட்சிகளை, புதிய உலகை, புதிய செவ்வியலை வெளிப்படுத்துபவை. 49 கவிதைகள் அடங்கிய இந்த நூல் ந. ஜயபாஸ்கரனின் ஐந்தாவது தொகுப்பு.