சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் இலக்கியமாயிற்று. மறுபுறத்தில் அவை சமூக விமர்சன மாகவும் விரிந்தபோது சமூகம் சார்ந்த பல அரசியல், அறவியல், சமூகவியல் விவாதங்களுக்கு அது இட்டுச் செல்கிறது. அந்த வகையில் கவிதையின் இன்னொரு முக்கியமான பரிமாணத்தை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.