“இம்முறை நிலா என்னைத் தின்னும்போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே ரசித்து… ரசித்துத் தின்றது” என்ற அந்தப் படிமச் சுவையில் சொக்கிடுவோம்.
“எல்லா நதிகளும் அதனதன் அளவே அதனதன் இமயத்தில்தான் தோற்றம் கொள்கிறது” என்ற வரிகளுக்காக அந்த எழுதுகோலை முத்தாட விரும்புகிறேன்.
பள்ளி வாயிலில் ஒரு பாகிஸ்தானிய சகோதரன் தொழுது கொண்டிருக்கையில் அவன்பெற்ற சிறுபிள்ளை இனந்தெரியாமல் மகிழ்ந்து துள்ளி விளையாடுவதைக் கண்ட கவிஞர்,
“என் இந்திய விரல்கள் தொட்டு அப்பிக்கொண்டேன் அவன் அழகிய கன்னங்களின் மென்மையை” என்று எழுதிய பொன்வரிகளுக்காக அவர் எழுதுகோலை அல்ல அவர் கரங்களில் முத்தமிடுகிறேன்.
பகையை விதைத்து உயிர்களை அறுவடைசெய்யும் நிகழ்காலக்கேடுகள் அழிந்தொழிய இவ்வரிகள் உதவட்டும்.
– தமிழறிஞர்.ப.திருநாவுக்கரசு, தஞ்சாவூர். (மேனாள் தமிழ் விரிவுரையாளர், சிங்கப்பூர்)