மு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பிக்க முடியாதவர்கள். தப்புவதற்கான வழியோ முனைப்போ அற்றவர்கள். தம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட கழிவுகளையும் துர்நாற்றங்களையும் உண்டு வாழும் அற்பமான உயிர்கள். இது அவரது பல கதைகளுக்குள்ளும் தென்படும் சித்திரம். இந்தச் சித்திரம் அவரது கதைகளுக்கு அரசியல் பண்பை அளிப்பது. வாழ்வைச் சூழ்ந்திருக்கும் துர்நாற்றங்களின் அரசியலையும் மரணத்தின் அரசியலையும் பேசுபவை இக் கதைகள். மு. குலசேகரன்: மு. குலசேகரன் (பி. 1961) முழுப் பெயர் மு. குலசேகரபாண்டியன். மு. குலசேகரன், குலசேகரன் ஆகிய பெயர்களில் எழுதி வருகிறார். வேலூர் மாவட்டம், பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். ‘ஓரு பிடி மண், ‘ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. கைபேசி: 94424 13262 மின்னஞ்சல்: kulasekaranvnb@gmail.com