இத்தொகுப்பிலுள்ள 12 கதைகளின் கதைக்களங்களும் சரி; கதை மாந்தர்களும் சரி; யாருமே நமக்குப் புதியவர்களாகவோ, அந்நியமானவர்களாகவோ இல்லை. நம் வாழ்வின் கதைக்களங்களாகவே இக்கதைகளின் கதைக்களங்கள் உள்ளன. நமக்கு நன்கு அறிமுகமானவர்களாகவே இக்கதைகளின் மாந்தர்கள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் நெருக்கத்தை வாசகனுக்கு அளிக்கின்றன.ஒவ்வொரு கதையிலும் வாழ்வின் ஒவ்வொரு மணம்; ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோவோர் செய்தியை தன் வாழ்வின் போக்கில் நமக்கு உணர்த்திப் போகின்றன.
முன்னரே மௌன ஒத்திகைகள் என்ற கவிதை நூலும், ஸ்னெஹி எனும் நாய் என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ள சிவமணியின் மூன்றாவது நூல் ‘ஆதிராவின் மொழி’. தன் வாழ்வை, தன் வாழும் சமூகத்தின் நடப்பு உண்மைகளை அசலான கதைகளாக எழுதும் சிவமணியின் முயற்சியில் இன்னும் பல சிறப்பான கதைகள் வருங்காலத்தில் வசப்படட்டும்.
-மு.முருகேஷ்