வெறும் சுய செய்திகளாகவும் சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை. – டி.பி. அசோக் கதைகளின் மீது கனவுத்தன்மையைப் படியவைப்பதன் வழியாக அவற்றை ஒளிகொள்ளச்செய்யும் திவாகரின் கலை மிக முக்கியமானது. இது கதைகூறலில் அவர் கண்டடைந்த வெற்றிகரமான வழிமுறை. எழுபதுகளிலேயே அந்த வழிமுறையைக் கண்டடைந்து செயல்படுத்திய முன்னோடிப் படைப்பாளியென்றே அவரைக் குறிப்பிடவேண்டும். ஒன்றைப்போல பிறிதொன்றை உருவாக்காமல் ஒவ்வொன்றையும் புதிது புதிதாக உருவாக்கும் புதுமைநாட்டம் அவரை முக்கியமான சிறுகதையாளராக உருவாக்கியுள்ளது. – பாவண்ணன். திவாகர்: எஸ். திவாகர் (பி. 1944) 1944இல் பெங்களூர் மாவட்டத்தின் சோமத்தனஹள்ளி கிராமத்தில் பிறந்தார். தேவனஹள்ளியிலும் பெங்களூருவிலும் கல்வி கற்றார். கர்நாடகப் பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். அடிப்படையில் பத்திரிகையாளரான அவர் 1989 – 2005வரை சென்னையில் இருக்கும் அமெரிக்கன் தூதரகத்தில் பத்திரிகை ஆசிரியராக இருந்தார்; தில்லி நேஷனல் டிரஸ்ட்டுக்காக அவர் எழுதிய ‘சமூக ஊடகங்கள்’ என்ற புத்தகம் இந்தியாவின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, தலையங்கம் எனப் பல இலக்கிய வடிவங்களில் முப்பதுக்கும் அதிகமான படைப்புகளைக் கொடுத்தவர். ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம் தொகுத்த திவாகரின் தேர்ந்தெடுத்த கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Hundreds of Streets to the Palace of Lights’, இது 2016இல் அகில இந்தியா கிராஸ் வர்ட் விருதுக்கு shortlist ஆன புத்தகம். திவாகர் பெற்ற பல விருதுகள், கௌரவங்கள் இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் சீனியர் பெலோஷிப், ரைட்டர்–இன் – ரெஸிடென்ஸ், ஐயோவா பல்கலைக் கழகம், யு.எஸ்.ஏ., கர்நாடக சாகித்திய அகாடெமி விருது, அகில இந்தியா கதை விருது, குவெம்பு பாஷா பாரதி விருது, சிவராம் காரந்த் விருது, வி.சீ. சம்பதா விருது, முத்தன காவிய விருது, பி.எச். ஸ்ரீதர் இலக்கிய விருது, ஆர்யபட்டா விருது, கொல்கத்தா அகில இந்தியா இந்தி கௌரவ விருது ஆகியவை திவாகர் பெற்ற விருதுகளும கௌரவங்களும் ஆகும். Email: diwasurya@gmail.com