அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது ‘கிறுக்கி’.
படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், ‘படைப்புக் கனல்’ என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் வெம்மை மூச்சுத் திணற வைக்கின்றது நம்மை!
நவீன சிந்தனையுலகைத் தன் படைப்புலகின் வாயிலாக அரபுலகம் எட்டிப் பிடித்திருக்கின்றதா என்ற கேள்வி நம்மிடையே இதுவரை இருந்து வந்தது. அந்தக் கேள்வியை இப்போது இல்லாதொழிக்கின்றது இத்தொகுப்பு.