தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் தெரியவருவதில்லை என்ற குறையைப் போக்கும் முயற்சியில் சின்ன அடிவைப்பு இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
ஸ்ரீ விரிஞ்சியின் பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு ருசிகரமான வாசிப்புக்குரியது. இந்தக் கதைகளின் பின்னணி அன்றாட வாழ்வின் இயக்கத்தைச் சார்ந்தது. மனித இனத்தை மேன்மைப்படுத்துவது என்ற பொது இழை எல்லாக் கதைகளிலும் ஊடுருவிச் செல்கிறது. வாழ்வதல்ல; மேம்பட வாழ்வது என்பதே இந்தக் கதைகள் முன்வைக்கும் பொதுச் செய்தி.