நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ்குமார இந்திரஜித். முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள் மனவோட்டத்துக்குமிடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகளின் மர்மங்கள் மாயப் புனைவுகளாக வெளிப்படுகின்றன. 2005 வரை சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. சுரேஷ்குமார இந்திரஜித்: சுரேஷ்குமார இந்திரஜித் (பி. 1953) ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com