மரணவீட்டில் நிகழும் உள்ளார்ந்த உளவியலை, உணர்வுநிலையை அப்பட்டமாய் உடைத்துப் பேசுகிற படைப்பு எவ்வளவு வீரியமாக இருக்கும் என்பதற்கு இக்கதைகளே சான்று.
துக்கவீட்டில் உதிர்க்கப்படும் கண்ணீர், இறந்தவருக்கான கண்ணீர் மட்டுமல்ல. அதன் பின்புலத்தில் சொல்லப்படாத, சொல்லவே முடியாத ஆயிரம் காரணங்களை அவை சுமந்து நிற்கின்றன. ஃகபருக்குள் இறக்கப்படுவது ஜனாசா மட்டுமல்ல, ஆயுள்முழுதும் சுமந்து திரிந்த, வெளிப்படுத்தப்படாத இரகசியங்களும்தான்.
ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பின்னுள்ள கணக்கு வழக்குகள், வலிகள், ஏமாற்றங்கள், வன்மங்கள், துரோகங்கள், போலிப்பெருமிதங்கள் போன்றவற்றையெல்லாம் ததும்பத் ததும்பப் பேசுகிற இப்படியொரு தொகுப்பை இதுவரை நான் வாசித்ததில்லை.
தோழர் சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்