பிரியாணி கடை
சமீபகாலமாக இஸ்லாமியர்களின் வாழ்வியல் சார்ந்த கதைகள் அதிகம் வெளிவருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இஸ்லாமிய இலக்கியம் சீண்டப்படாது, வாசகர் எல்லை குறுகியது, வெகுஜனத்தால் வாசிக்கப்படாது என்பது போன்ற கட்டுக்களையெல்லாம் உடைத்து வெளிவரும் படைப்புகள் சமூகத்தின் ஆரோக்கியமான போக்குக்கான பாதையைத் திறந்து வைத்திருக்கின்றன.
இது காலத்தின் கட்டாயமும்கூட. சமூக நீரோட்டத்திலிருந்து நம்மைப் பிரிக்கும் சதி, சூழ்ச்சி நிறைந்த காலகட்டத்தில் நேர்மை மிகுந்த பொதுமக்கள் நம்மைப் புரிந்துகொள்ள இத்தகைய இலக்கிய வடிவம் நிச்சயம் பயனளிக்கும்.
இஸ்லாமியர்கள் என்றாலே பணம் செழித்திருக்கும்/வெளிநாடுகளில் வசதியாய் வாழும்/நகைகள் அணிவகுக்கும், விருந்துப் பந்திகளில் அதிக சிரத்தையெடுக்கும் பிரம்மாண்ட நபர்கள் மட்டுமா? அதைத் தாண்டியும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல், பணம் படைத்தவர்களின் வாழ்வியலிலிருந்து மாறுபட்டவை. அத்தகையவர்கள்மீது எந்தப் பூச்சும் இன்றி, வார்த்தைகளில் எந்த அரிதாரமும் அற்று கதை வடிவில் தந்திருக்கின்றார் சகோதரர் தாஹிர்.
பிரியாணி கடை
ஆசிரியர்: அரும்பாவூர் இ. தாஹிர் பாட்சா