“திருக்குர்ஆனை எளிதில் ஓதிட…” எனும் இந்நூல். பதினைந்தே பாடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலை வைத்துக்கொண்டு எளிய முறையில் நீங்களே சுயமாகத் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதேநேரத்தில் கற்றுக்கொள்ள ஓர் ஆசிரியரின் உதவி தேவை என்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காகவே ஓர் ஆசிரியர் உங்களோடு இருந்து உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் காணொலி வடிவில் பாடங்கள் நடத்தப்பட்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை நீங்கள் உங்கள் கணினியிலோ அலைபேசியிலோ இயக்கி, காட்சியைப் பார்த்துக்கொண்டே இந்நூலைக் கவனித்தால் அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் சுயமாகவே திருக்குர்ஆனை எளிய முறையில் ஓதக் கற்றுக்கொள்ளலாம். அதன்பின் சில மாதங்களில் திருக்குர்ஆனை அதன் மூலமொழியான அரபியில் சரளமாக வாசிக்கத் தொடங்கிவிடலாம். |