முஸ்லிம்களிடம் வியாபித்திருக்கும் இஸ்லாம் பற்றிய அறியாமை; பிற மதங்கள், கொள்கைகளிலிருந்து இஸ்லாத்துக்குள் ஊடுருவியிருக்கும் அந்நிய பழக்கவழக்கங்கள், பண்பாடுகள்; சம்பிரதாயமான சடங்குகளை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டு யதார்த்த வாழ்விலிருந்து அந்நியப்பட்டிருப்பதால் உருமாறியுள்ள இஸ்லாமிய வாழ்வு; இஸ்லாத்துக்கு மாற்றமான சமூகச் சூழல்களின் தாக்கம்; இஸ்லாமிய நம்பிக்கைகள், நடைமுறைகளுக்கு எதிரான ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறைகள், கெடுபிடிகள்; இஸ்லாத்தின் உண்மைக் குறிக்கோளைப் புரிந்துகொள்ளாத முஸ்லிம்களின் செயலூக்கம் அற்ற தன்மை போன்ற உள்ளடக்கங்கள் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன. |