இஸ்லாத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள உதவும் ஒரு சிறிய வழிகாட்டியாக அமைந்துள்ளது. மூன்று அத்தியாயங் களைக் கொண்ட இந்நூலில் முதல் அத்தியாயம் இஸ்லாத்தைப் பற்றி அறியாதவர்கள் கேட்கின்ற * அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமா? * அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உண்மையிலேயே இறைத்தூதர்தாமா? * இஸ்லாமிய மார்க்கம் உண்மையிலேயே இறைவனிடம் இருந்து வந்ததுதானா? போன்ற வினாக்களுக்கு ‘இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கமே!’ என விடையளிக்கும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இரண்டாவது அத்தியாயம் : * இஸ்லாத்தை பின்பற்றுவதால் உண்டாகும் பயன்களை பற்றியும் மூன்றாவது அத்தியாயம் : * பயங்கரவாதம் குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன? * இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன? போன்ற வினாக்களுக்கும் விடையாக இருக்கிறது. |