தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 9

கல்பனா சன்னாசி

முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :

அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8

காலை முதல் பரபரத்துக் கிடந்த கல்லூரி சற்று இளைப்பாறிக் கொண்டிருந்த மதிய நேரம்.

அடுத்த நாள் நடத்த வேண்டிய பாடம் பற்றி குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா.

அவளது அறை வாசலில் அரவம்.

நிமிர்ந்தாள்.

நிஷா!

“ஹாய் நிஷா. வா, வா..”

“வந்துகிட்டே இருக்கேன். உன்னை ஒரு கை பார்க்க.”

“என்னையா? ஒரு கை பாக்கணுமா? அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன் நான்?” – அப்பாவியாகக் கேட்டாள் சுப்ரியா.

“திருடி. திருடி. ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறதைப் பாரு.”

“எதுக்கு இந்தப் பழி? எதை திருடினேன் நான்?”

“நீயா? என்ன திருடினே நீயின்னு சொல்லட்டுமா?”

“சீக்கிரமா சொல்லு தாயே. விஷயம் புரியாம என் மண்டை காயுது.”

“காயும். காயும். செய்றதெல்லாம் செஞ்சிட்டு. அப்பாவி மாதிரி முகத்தை வச்சிகிட்டா ஆச்சா? அமுக்னாம் பூனை.”

“பாரு நிஷா, எனக்கு கோபம் அதிகமா ஆகிறதுக்குள்ளே விஷயத்தை சொல்லிடு. இல்லேன்னா…”

“இல்லேன்னா? என்ன பண்ணுவே? அறைஞ்சிடுவியா?”

பக்கென்றது சுப்ரியாவுக்கு.

“என்ன நிஷா, என்ன சொல்றே நீ?”

“நேத்து நான் அஷோக்கிட்டப் பேசினேன்.”

“மீட் பண்ணீங்களா?” மறைக்க முயன்றும் மறையாமல் சுப்ரியா குரலில் வெளிப்பட்டது கொஞ்சம் பொறாமை.

“பொறாமையோ?”

“சேச்சே… நீ அஷோக்கிட்டப் பேசினா எனக்கென்ன பொறாமை?”

“நிஜத்தை சொல்லு. உனக்கு அவனைப் பிடிக்கலை?”

“என்ன உளர்றே?”

“நான் ஒண்ணும் உளறலை. நேத்து நான் அஷோக்குக்கு போன் பண்ணேன். மொத்தப் பேச்சு உன்னைப்பத்திதான்.”

“என்னைப்பத்தி நீங்க எதுக்குப் பேசணும்?”

“எனக்கு மட்டும் ஆசையா என்ன? அஷோக்கிட்ட உன்னைப்பத்திப் பேசணும்னு? ஆனா நான், ஐ லைக் யூ அஷோக். ஐ லவ் யூ அஷோக் – ன்னு லிட்டர் கணக்கா ஜொள்ளு விடறேன். அவன் என்னடான்னா, ஐ லைக் சுப்ரியா. ஐ லவ் சுப்ரியா – ன்னு மாஞ்சு மாஞ்சு உருகுறான்? என்னடி நடக்குது உங்களுக்குள்ள?”

சட்டென்று முகம் சிவந்தாள் சுப்ரியா. காதலிக்கிறானாமே? மனசுக்குள் மழையடித்தது.

ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போலிருந்தது.

கனவுலக கதவுகள் திறக்க தான் நுழைவதாய் உணர்ந்தாள்.

“என்ன பேச்சையே காணும்? ட்ரீம் வேர்ல்டா?”

உதட்டைக் கடித்தபடி தலையை குனிந்து கொண்டாள் சுப்ரியா.

“அட..அட.. வெக்கத்தைப் பாரு. சரி.. சரி. நடத்துங்க. இந்த அழகான இளைஞர்களுக்கு எல்லாம் ஏன்தான் இந்த அம்மாஞ்சி பொண்ணையே புடிச்சித் தொலைக்குதோ?”

தோளை குலுக்கியபடி, கைகளை விரித்து ஏதேதோ முணுமுணுப்பாக புலம்பியபடி அங்கிருந்து அகன்றாள் நிஷா.

அப்போதே அஷோக்கிடம் பேச வேண்டும் போல் இருந்தது சுப்ரியாவுக்கு.

வேண்டாம். வேண்டாம். கல்லூரியிலிருந்து வேண்டாம்.

நிதானமாக வீட்டுக்குப் போன பிறகு பேசிக்கொள்ளலாம்.

காத்திருக்கத் தொடங்கினாள்.

நிமிஷங்கள் யுகங்களாக நீ…………ண்………..ட……….ன.

*****

மாலை வந்து சேர்வதற்குள் சுப்ரியாவின் இதயம் சற்று விட்டு விட்டே துடித்தது.

இயந்திர கதியில் சட்டுப்புட்டென்று சாப்பிட்டுவிட்டு, “கொஞ்சம் படிக்கணும்”, அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

மொபைலை எடுத்து, “ஹலோ..” என்றாள்.

“யெஸ்?”

“அஷோக், நான் சுப்ரியா பேசறேன்…”

“தெரியுது. சொல்லுங்க. என்ன விஷயம்?”

“அ.. அது வந்து.. ஒண்ணுமில்லை..” படக்கென்று ஒரு தயக்கம் வந்து சூழ்ந்துகொள்ள உளறிக் கொட்டினாள் சுப்ரியா.

“ஒண்ணுமில்லையா? ஒண்ணும் இல்லாததுக்கா இந்த ராத்திரியில் வேலை மெனக்கெட்டு எனக்குப் போன் பண்றீங்க?”

“வந்து.. ஐயாம் ஸாரி..”

எதிர் முனையில் சில விநாடி மௌனம்.

“ஹலோ..?” போனை வத்துவிட்டானோ? சுப்ரியா பதற –

“கேட்டுகிட்டுதான் இருக்கேன். சொல்லுங்க..”

“அவசரப்பட்டு உங்களை அறைஞ்சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.”

“பரவாயில்லை. விடுங்க. நானும் கூட அப்படிப் பேசியிருக்கக் கூடாது. நானும் உங்களுக்கு ஸாரி சொல்லணும்.”

“உங்களுக்கு என் மேல கோபம் இல்லியே?”

“சுத்தமா இல்லை”

“நிஜமா?”

“சத்தியமா”

“அப்ப ப்ரூவ் பண்ணுங்க.”

“சொல்லுங்க. என்ன பண்ணணும்?”

“எங்கூட ஒரு கப் காபி சாபிடணும்.”

“ஹஹ்ஹஹஹஹா…” கடகடவென்று சிரித்தான் அஷோக். “என்னை கிண்டல் பண்றீங்களா?”

“இல்லை நிஜமாதான் சொல்றேன். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. அது பத்தி உங்ககிட்டப் பேசணும். ஒரு கப் காபிதானே? விஷமா என்ன?”

“ஓகே. ஷ்யூர்..” என்றான் அஷோக் சிரிப்பு சற்றும் குறைந்துவிடாத குரலில். “சரி. எப்போ எங்கே மீட் பண்ணலாம்?”

“நீங்க சொல்லுங்க..”

“பீச்?”

“ஓகே. எப்ப மீட் பண்ணலாம்?”

“திஸ் சண்டே? ஈவ்னிங் 4. 30?”

“ஓகே.”

“ஓகே சுப்ரியா. சண்டே பாக்கலாம்.”

“தாங்க்யூ அஷோக். குட் நைட். பை.”

“குட் நைட் சுப்ரியா. டேக் கேர். பை.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *