இந்தக் கட்டுரைகளை நாம் மேம்போக்காக சமூகம் சார்ந்த கட்டுரைகள் எனக் கடந்து விட முடியாது. முழுக்க முழுக்க நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களின் குரலாக, அவர்களின் வாழ்வியலைப்பற்றி பேசுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் சமூகச் செயல்பாடுகள், தற்போதைய நிலை என இந்த நூல் கண்டிப்பாக வாசிப்பவர்களின் மனங்களில் எல்லாம் எளிய மனிதர்களின் வாழ்வியலக் கொண்டு சேர்க்கும். மேலும், நாம் பார்த்துக் கடந்து வந்த மனிதர்களின் வாழ்வியலைத் தீவிரமாகப் பேசுவதுடன் அத்தீவிரத்தை எல்லா இடங்களுக்கும் கடத்தும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.