காதல், நட்பு, இழப்பு மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருட்கள் மூலம், ஒவ்வொரு கதையையும் தனித்துவமான கதாபாத்திரங்களைக் கொண்டு உயிர்ப்பித்திருக்கிறார் எழுத்தாளர். மன வலிகளை வரையறுக்கும் சம்பவங்களாகவும், பெண்களின் மனதை பிரதிபலிக்கிற கதைகளாகவும் வடித்திருக்கிறார் எழுத்தாளர்.
இந்தக் கதைகள் உண்மை நிகழ்வுகளைத் தொட்டு எழுதப்பட்டிருப்பதால் அன்றாட வாழ்க்கையில் நேசித்த, இழந்த அல்லது ஆழமான அர்த்தத்தை ஏற்படுத்திய உறவை நிச்சயமாக வாசகர்களுக்கு நினைவுபடுத்தும்.

