“டேய் அந்த ஓடுகாலிய பாக்குற இடத்தில் வெட்டி வீசுங்கடா…” என்று அங்கிருந்த ஒரு பெருசு உசுப்பேற்றியது.

இளைஞர்கள் தயாரான போது, உடனடியாக அங்கு நின்ற காவலர்கள். “உங்களை நாங்கள் எச்சரிக்கிறோம். அந்தப் பெண்ணை நாங்கள் பிடித்து விடுவோம். நீங்கள் யாரும் இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது. மீறினால் சுட்டு விடுவோம். மரியாதையாக அத்தனை பேரும் வீடுகளுக்குப் போய்விடுங்கள்” என்று எச்சரித்தார்கள்.

ஆனால் அவர்கள், “அவளை விட மாட்டோம்” என்று நின்றார்கள்.

“இறுதியாக எச்சரிக்கிறோம். மரியாதையாக கட்டுப்படுங்கள். இல்லை என்றால் துப்பாக்கிச்சூடு நடத்துவோம்.” என்றது காவல்துறை.