”வேலை நேரம்” என்ற இந்தக் குறும்புதினம் வித்தியாசமான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம் பற்றிய படைப்பு இது. அதிலும் குறிப்பாக, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றிய கோரிக்கையும் போராட்டமும் என்று சொல்லலாம்.

”படித்து முடித்து வேலைக்கான கட்டாயத்தில் தொண்டு நிறுவனங்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் விழுந்து அமை[ப்புசாராத் தொழிலாளிகளாகவே வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின் குறைந்தபட்ச நலனுக்காகக் குரல் கொடுக்க ஓர் அமைப்பு தேவை.” இந்த வாக்கியம்தான் இந்த நாவலின் மூச்சுக் குழல்.