ஆதியில் சொற்கள் இருந்தன
அதற்கு சிறகுகளும் இருந்தன
பசி தாகம் கொண்ட சிறுவன்
பறந்து கொண்டிருந்த ஒரு சொல்லை
நிலத்தில் வீழ்த்திய போது
கடல் நிறைந்தது
அவன் கல்லெறிய கல்லெறிய
தாவரங்களும்
விலங்குகளும்
பறவைகளும்
பல்லுயிர்களும்
வந்தன
யாவும் யாவும் யாவும் அப்படியே வந்தன
நான் நெஞ்சிலிருந்து ஓர் அன்பை எடுத்து
வானில் எறிகிறேன்
அது சொல்லாகிப் பறக்கிறது
எல்லா கவிதையிலும் படர்வது
அதன் நிழலே.
நூல் முழுவதும் இப்படியான கவிதைகளை
ஐந்து தலைப்புகளில் எழுதி இருக்கிறார் நண்பர் இளங்கோ கிருஷ்ணன்
பிரமிளா அதிகமாக எழுதுபவர் இல்லை. ஒவ்வொரு கதைக்கும் கால இடைவெளி எடுத்துக் கொள்பவர். அல்லிராணியே கடைசிக்கதையாக இருக்க வேண்டும், எனில் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது.
வார்த்தை சிக்கனம் இவரது பெரும்பாலான கதைகளில் கையாளப்பட்டிருக்கும். வாசகர் விஸ்தரித்துக் கொள்ள இடைவெளிகளை வேண்டுமென்றே கதைகளில் விட்டிருப்பார்.
இந்தத் தொகுப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகச்சிறப்பான அறிமுகமாக இருக்கும். சில மணிநேரம் விரும்பித் தொலையலாம் இந்தக் கதைகளில்.
இந்த நூலிலுள்ள பன்னிரெண்டு கட்டுரைகளில் அவரது கலை இலக்கிய அக்கறைகளை வளமான மொழியாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார். எளிமையான நடையில் தீர்க்கமான கருத்துக்களை முன் வைக்கின்றார். தமிழ்நாட்டு சிறுபத்திரிக்கை தமிழ்நடைக்கு பரிச்சயமான நமக்கு, மேடையில் வீசும் ஒரு மெல்லிய பூங்காற்று போல் ஈழத்தமிழ் வருகின்றது. துல்லியமான சொற்பயன்பாடும் தெளிந்த நடையோட்டமும் நம்மை ஈர்க்கின்றது.
-தியடோர் பாஸ்கரன்
வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. பல்வேறு முகமூடிகளினூடாக அவற்றை மறைத்துக் கொள்ளக் கூடியது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுபிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாகக் கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லிமுடிக்க முடியாதவை. அலைகளைப் போல முடிவற்று நம்மைச் சுற்றி நிறைந்திருக்கின்றன மனிதர்களின் கதைகள். அவ்வகையில், முடிவிலியாய் நீண்டு செல்லும் அந்தக் கதைச் சங்கிலியின் ஒரு கண்ணியாய் தங்கள் இருப்பை உறுதி செய்ய முயல்கின்றன இக்கதைகள்.
இத்தொகுதியில் உள்ள ‘மறவோம்’ சிவா கிருஷ்ணமூர்த்தியின் மிகச்சிறந்த சிறுகதை மட்டுமல்ல, புலம்பெயர்வகை இலக்கியத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றும்கூட. இது மிக ஆழமாக ஒரு பண்பாட்டு உரையாடலை கதைநிகழும் தளத்தில் நிகழ்த்தி, கதை முடிந்தபின்னர் வாசகனின் எண்ணங்களிலும் நீட்டிக்கச் செய்கிறது.
பால்ய நண்பர்களுடன் கோவப்பழம் பறித்து, குயில் தட்டு செய்து மேலக்கட்டுத்திடலில் வெகுநேரம் காத்திருந்து குயில் பிடித்து கொஞ்சி விளையாடி மகிழ்ந்து.. பின் வான்நோக்கி உயரப்பறக்க விடுவோம்.
மார்கழிமாத அதிகாலைப் பொழுதுகளில், வாசல் கோலத்திற்காக பறங்கிப் பூ, பூசணிப்பூ, வெண் தும்பைப் பூ பறிக்கச் சென்றது. வெண்பனி மூட்டத்துடன் கவிதையாய் என்னுள் வாசம் செய்கிறது.
ஊரில் மழை பொய்த்த காலத்தில் ஊர்மக்கள் ஒன்றுகூடி பறையடித்து கொடும்பாவி இழுத்தவுடன் மழை பெய்து வியப்பில் ஆழ்த்திய வாழ்வனுபவத்திலிருந்தே எம்மக்களின் கதைகளை எழுதத் தொடங்கினேன்
நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். இந்தப் படைப்பு, எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால நிகழ்ச்சிகளை, பண்பாட்டுக்கூறுகளை தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு ஆவனக்குவியலாகவே நான் கருதுகிறேன்
இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது.
தமிழர் – இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது.
– லக்ஷ்மி சரவணகுமார்
முன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான வட்கமிஹர் ஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப் போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மதப்பது அல்லது பரதிகளில் இன்பம் காணுவது எனநீரும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இப்படியாக மொத்த கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ், உறவாக தொடர முடிகிறது. காலமற்ற இடத்தில் ஒரு மையமற்று விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகம் பாடுபட்டும் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன. ஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.
ஹாரி பாட்டரின் சாகசங்கள் இப்புத்தகத்தில் இன்னும் சுவாரசியமாகத் தொடர்கின்றன. அவன் விடுமுறை முடிந்து மீண்டும் ஹாக்வார்த்சுக்குப் படிக்கச் செல்லக்கூடாது என்றும், அப்படி அவன் அதை மீறிச் சென்றால் பெரும் விபரீதங்கள் விளையும் என்றும் ஒரு வினோத பிராணி 'டாபி' அவனை எச்சரிக்கிறது. அதை அலட்ச்சியம் செய்துவிட்டு ஹாரி ஹாக்வார்த்சுக்கு திரும்பி செல்கிறான்.... பக்கத்திற்குப் பக்கம் மாயாஜாலம், படுசுவாரசியமான கதையோட்டம், வாசர்களால் ஊகிக்க முடியாத திகிலான திருப்பங்கள் ஆகியவை நிறைந்துள்ள இப்புத்தகத்தை கையில் எடுத்தால் எவரொருவராலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது!