♦ஃபலஸ்தீன் தேச மக்களின் போரட்டவியலை தெரிந்து கொள்ள வேண்டிய
முக்கிய அம்சங்களை எளிய நடையில் தேவையான செய்திகளுடன் யதார்த்தமாக பதிவு
செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல்!
♦1897 ம் ஆண்டு தியோடர் ஹெர்ஸல் சியோனிஸத்தை அறிவித்தது முதல் 2019 நவம்பர்
காஸா இஸ்ரேல் தாக்குதல் வரை முக்கிய வரலாற்றுச் செய்திகள்!
♦ஃபலஸ்தீன் போராட்டத் தலைவர்களின் பதிவு செய்யப்படாதப் பக்கங்கள்!
♦ஷேய்க் அஹ்மத் யாஸீன் அவர்கள் பற்றிய சுவாரசியமான செய்திகள்!
♦ஜெரூஸலம், காஸா குறித்த விரிவான போராட்டச் செய்திகள்!
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன.
• ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியத்திலும்
அவசியமான போதனைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்
பட்டிருக்கிறது.
• பிரமிப்பூட்டும் ஆறு ஹதீஸ் புத்தகங்களைப் புரட்ட வேண்டிய நிலை இதன்மூலம்
எளிதாக்கப் பட்டுள்ளது.
• இந்தியா - இலங்கை தேசங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இந்நூலுக்கு மதிப்புரை
வழங்கி, நூலைப் பற்றிய நல் அறிமுகத்தை தந்திருக்கின்றனர்.
• மார்க்கத்தை எளிய வடிவில் விளக்குவதற்கும், மதரஸாக்களில்
வகுப்பெடுப்பதற்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
• ஆதாரத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அரிய செய்திகளைக் கூறும்
இந்நூல் “நன்மை விரும்பிகளின் நந்தவனம்”.
• இறையில்லங்கள் தோறும் இருக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம்.
கல்கி இதழில் வெளியான 'ரோஜா', கடைந் தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத் தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி.
அகத்தில் உள்ள தேசம் புறத்தில் உள்ள தேசத்தோடு நடத்தும் ஊடாடலும் உரையாடலும்தான் இன்பாவின் கவிதைகள். பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களே சேர்ந்து உருவாக்கிய சிங்கப்பூர் என்ற
தேசத்தின் எல்லைகளும் வரையறைகளும் பெருமூச்சுகளும் சின்னங்களும் இப்படித்தான் இன்பாவின் கவிதைகளில் இயல்பாகத்தோன்றிவிடுகின்றன. ஒரு குட்டி தேசத்தில், அங்குள்ஈரச்சந்தையில்
சந்திக்கும் பல்லுயிர்களையும் தன் பெரும் கூடையில் சேகரித்துக் கொண்டே, தேசிய கவியாக உருவாவது எளிதுபோல. பாரதிதாசன் மரபில் கிளைத்து ஒருவர் நவீன கவிதையின் புதிய சாத்தியங்களுக்குத் தகவமைக்க முடியும் என்ற நம்பிக்கையான செய்தியை இன்பாவின் கவிதைகள் எனக்குத் தந்திருக்கின்றன.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
தொல்காப்பியம் திணையின் அடிப்படையில் இலக்கியத்திறகான இலக்கணங்களை வகுக்கிறது. இன்பாவின் இத்தொகுப்பும் திணையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பியம் குறிப்பிடுவதைப் போன்ற செவ்வியலான கருப்பொருள், முதற்பொருள், உரிப்பொருள் பண்புகளால் ஆனதல்ல. இவை நவீன வாழ்வுக்கு ஏற்றாற்போல் ஒரே சமயத்தில் திணை மயங்கியவையாகவும் திணையை அனுசரிப்பவையாகவும் இருக்கின்றன. இது இத்தொகுப்புக்கு ஒரு புதிய நிறத்தைத் தருகிறது. -இளங்கோ கிருஷ்ணன்
வங்கிகள் அனைத்துக்கும் வட்டிதான் கால்கோள் என்பது ஊரறிந்தச்
சங்கதி.
இந்தச் சூழலில், முதலீடுகளுக்கும் கடன்களுக்கும் வட்டி வாங்கிக்கொள்ளாமல்
இஸ்லாமிய வங்கிகளால் இயங்க முடியுமா என்கிற கேள்வி பலருக்கும் திகைப்பை
ஏற்படுத்திவிடலாம்.
வட்டி எனும் 'ஆட்கொல்லி' அரக்கனிடம் அகப்பட்டுவிடாமல் இஸ்லாமிய வங்கிகளால்
நிச்சயம் தொழிற்பட முடியும் என்பதை நிறுவ முயலும் நூல் ஆசிரியர் நூ. முஹம்மது
கனி, கடைநிலைச் சாமானியனும் புரிந்துகொள்ளும் விதத்தில் தனது கண்டடைவுகளை
இயைபானத் தலைப்புகள், செய்முறை உதாரணங்கள்வழி இந்நூலில்
விளக்கியிருக்கிறார்.
கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு செய்யத் தவறிய வாழ்க்கையை அதன் அடர்த்தியோடு உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் இரண்டுவிதமான அந்நிய வாழ்க்கையைப் பேசுகிறது. ஒன்று பிழைப்பிற்காக அரபு நாடுகளுக்குச் சென்று வாழும் இளைஞர்களின் சூழல் மற்றும் நெருக்கடிகள். ஊர் நினைவுகள். அரபு உலகில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள். அச்சமூட்டும் மனநிலை. பன்னாட்டு சமூக வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் எனப் புதிய கதைவெளியினை மையமாகக் கொண்டவை
இரண்டாவது வகைத் தமிழ்நாட்டிலிருந்து கூலித்தொழிலாளர்களாகச் சென்றவர்கள் கர்நாடகத்திலே தங்கி வாழும் போது அவர்கள் வாழ்க்கை எப்படியிருந்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறை மற்றும் மேலாதிக்கம். சடங்குகள் நம்பிக்கைகள். திருமண உறவுகள். மற்றும் மாறும் தலைமுறைகளின் அடையாளச்சிக்கல்கள். புகலிடத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். பொருளாதாரப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகள்.
மலையாளச் சிறுகதைகளில் இது போன்ற அரபு தேச வாழ்க்கை விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னடத்திற்கு நிச்சயம் இது புதுவகைத் திறப்பாகவே அமைந்திருக்கும். கனகராஜ் கதையை வளர்த்தெடுக்கும் முறை அழகாக உள்ளது. நினைவுகளையும் நிகழ்வினையும் அவர் அழகாகப் பின்னிச் செல்கிறார். அதிக உரையாடல்கள் கிடையாது. காட்சிகளாக விரியும் இந்த எழுத்தின் வழியே கடந்தகாலமும் நிகழ்காலமும் அழகான இணைந்து விரிகின்றன.
வாட்டர்மெலன் போலப் புதிய இளம்படைப்பாளிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் சிறந்த மொழியாக்கத்தைத் தந்த கே.நல்லதம்பிக்கும் அன்பும் பாராட்டுகளும்
வாட்டர்மெலன் தமிழ்வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது. கனகராஜ் பாலசுப்ரமண்யம் இன்னும் பல உயரங்களைத் தனது எழுத்தில் அடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப்பிடித்து கடந்து முன்செல்லும். ‘வைரஸ் கதைகள்’ எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலகட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண்முன் ஒரு டிஸ்டோபிய உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்காக்கும் கருவியுள்ளது. மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதை பொருத்த முடியும். எப்பேர்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்கு காரணமான சிக்கலை காட்டிலும் பூதாகாரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்க கூடுமா? எத்தனை கேள்விகள்!
: ‘விஷக்கிணறு’ அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.
‘விவேக சிந்தமாணி’ மாத இதழில், பல சிறுகதைகள் மாதந்தோறும் வெளியாகியிருக்கின்றன. .நீதிபோதனைகளாகவும், சம்பவ விவரிப்புகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் இருந்த அவற்றை, சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள் என்று மதிப்பிடலாம்.
கடந்த நூற்றாண்டுகளில் துவங்கிய இச்சிறுகதை மரபு வளர்ந்து, ஒரு பக்கக் கதைகள், அரைப்பக்கக் கதைகள் ஆகி, இன்றைக்கு ‘ட்விட்டர் கதைகள்’ ஆகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது அதன் வீரியமிக்க பாய்ச்சலை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் தலைமுறையில் பலரும் அறிந்திராத, படித்திராத அரிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை, கடந்து போன நூற்றாண்டை நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. அந்தக் காலத்து மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், சமூகப்பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஓர் வாயிலாக இச்சிறுகதைத் தொகுப்பைக் கருதலாம்.
ஆசிரியர் குறிப்பு, நிழற்படம், படைப்புகள் பங்குபெற்ற இதழின் படங்கள், கதைகளின் கதை, சிறுகதைகள் கொண்ட ஆய்வு நூல்.