மார்கழி பாவியம்: இனம் நிலம் மொழி இது எனது பதினைந்தாவது கவிதை நூல். இரண்டு இலக்க எண்ணிக்கையில் அச்சாகி வெளிவந்து, நட்புவட்டத்திற்கு வெளியே அறிமுகமாகாத சில தொகுப்புகளிலிருந்து நானே தெரிவுசெய்த கைப்பிடியளவு கவிதைகள்.
கடவுள், இசை, கலை, இலக்கியம் யாவும் செயற்கையானவை. உள்ளம் என்னும் இல்பொருண்மையை மனித உடம்புக்கு ஓர் உறுப்பாக்கிப் பொருத்திக்கொள்ளும் முயற்சி.
இலக்கியத்தின் முதன்மையான நான்கு பெரும் பிரிவுகளான கவிதை, கதை, கட்டுரை, நாடகம் இவற்றின் உள்ளடக்கத்தைக் கலைத்து அடுக்கி ஒன்றாய் ஆக்கிப்பார்க்கும் முயற்சியே கவிதை முதலான எனது படைப்புகள்.
ஒரு படைப்பாளரின் தொகுப்பிலிருந்து தேர்ந்த ஆக்கங்கள் என்பவை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுபடும். நானே எனக்கு முதல் வாசகன் என்பதால் இந்நூல் என் வாசிப்பின் தேர்ந்தெடுப்பில் உருவானது. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வாசிப்பில் நான் வெவ்வேறாகக் கலைத்து அடுக்கித் தேர்ந்துத் தொகுக்கப்படலாம். வாசகர் முகங்களே ஒற்றைப் பனுவலுக்குப் பன் முகங்களாகப் பொருந்தி உதிர்கின்றன. இயற்கை ஒருமையானது; செயற்கை, பன்மையானது. என்னைப்போலவே எனது பனுவல்களும் பன்மையின் விளைவு. இயங்கியல் பொருண்மை பன்மையாலானது.
- ரமேஷ் பிரேதன்
ஜீ. முருகன் 1967இல் திருவண்ணாமலை மாவட்டம் கொட்டாவூரில் பிறந்தார். வனம் என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். தற்சமயம் தினமணியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது படைப்புகள்: மின்மினிகளின் கனவுக்காலம் (நாவல்) சாயும்காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை (சிறுகதைத் தொகுப்புகள்) காட்டோவியம் (கவிதைத் தொகுப்பு)
அடர்த்தியான 25 நேர்காணல்களுடன் வெளிவந்திருக்கிறது ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’. கடந்த எழுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியச் சமூகம் கொண்டிருந்த பல்வேறு முகங்களைப் படைப்பாளிகளின் அனுபவங்கள் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் ம.நவீன்.
தமிழ் இலக்கியம் மலேசியாவில் நிலைபெற்ற கதை, சமகால அரசியல், கலை இலக்கிய முன்னெடுப்பு, சயாம் மரண ரயிலில் மலேசிய இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகள் முதல் ஹிண்ட்ராப் போராட்டம் உருவாக நவீன மலேசியாவில் தமிழர்கள் அனுபவித்த அழுத்தங்கள், தோட்டப் பாட்டாளிகளின் வரலாறு, மலேசியத் தொழிற்சங்கத்தின் வரலாறு, மே 16 இனக்கலவரம் குறித்த நினைவுகள் என நேர்காணல்கள் விவரிக்கின்றன.
அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் ஓட்டம் போலவே ஓடிச்செல்லும் கருத்து மது ஸ்ரீதரனுடையது. தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின்பு அடையாளம் கண்டிருக்கும் புதிதான வாசனையோடு மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம் தொட்டு, அரசியல், காதல், சினிமா பாடல், வாழ்வியல் அபத்தங்கள், அறிவியல் விளக்கங்கள் என அவர் கோர்க்கின்ற விதம் எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கின்றது
இந்நூல் பற்றி...
இந்நூல் முதல் முஸ்லிம் படையெடுப்பாளர் முகம்மது இப்னு காசிமிலிருந்து தொடங்கி
கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை பல்வேறு ஆட்சியாளர்களைப் பற்றிய செய்திகளைக்
கூறுகிறது. கி.பி.712 முதல் 1857 வரை ஏறத்தாழ 1150 ஆண்டுகால வரலாற்றை இச்சிறு
நூல் பதிவு செய்துள்ளது.
வடக்கிலிருந்து டெல்லி ஆட்சியாளர்களும், தெற்கிலிருந்த தக்காண
ஆட்சியாளர்களும், அரபுகள், பாரசீகர்கள், ஆப்கானியர், துருக்கியர் மொகலாயர்களாகவே
இருந்துள்ளனர். இவர்களுக்கு முற்றிலும் மாற்றமான மண்ணின் மைந்தர்கள் ஹைதர் அலீ,
திப்பு சுல்தான், மருதநாயகம் ஆகிய மூவர்.
முஸ்லிம் மன்னர்கள் என்றால் மொகலாய மன்னர்களே என எண்ணிக்
கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் பல புதிய செய்திகளைக் கூறுகிறது. கட்டுரைகளாகத்
தொடங்கும் நூல் பல கதைகளையும் ஆங்காங்கு சொல்கிறது. அரண்மனை நிகழ்வுகள்,
அந்தப்புர நிகழ்வுகள் ஆங்காங்கு இருந்தாலும், முஸ்லிம் மன்னர்களின்
போர்க்களங்களும் அவர்களுடைய வெற்றிகளும் சிறப்பாகவே பதிவாகியுள்ளன. அதேபோல்
தோல்விகளும் வீழ்ச்சிகளும்.
சாஜிதா புக் சென்டருக்காக 'மாவீரன் சதாம்' 'கழுகு தேசம்' 'காதியானிகள்'
'அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு' ஆகிய நான்கு நூல்களை எழுதியுள்ள தாழை மதியவனின்
ஐந்தாவது நூல் இது
மொழியின் மறு புனைவு (இலக்கியம் , இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வு, இசை, திரைப்படம் பற்றி எஸ்.சண்முகம் அவர்கள் எழுதிய கட்டுரைகள் ) தொகுப்பு வெளியாகியுள்ளது.
சேகரித்துத் தொகுத்தவர்: வேதநாயக்
மலை போன்ற துக்கத்தை மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளியைப் போல, ஒரு மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற ஒரு தலைமுறை இளைஞர்களின் சோகத்தையும் மதமோதல்களால் குண்டு வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்பு வைக்கவே விரும்புகிறேன் என்று இந்த நாவலின் மூலம் நமக்க எடுத்துரைக்கிறார்.
ஒருநாள் கோபத்தில் தற்செயலான மோதலில் ஏற்பட்டதல்ல இந்தக் கலவரமும் குண்டு வெடிப்பும்.
மௌனத்தின் சாட்சியங்கள் சம்பவங்களை உணர்வுப்பூர்வமாகப் பார்ப்பதோடு நில்லாமல் தவிர்க்க முடியாத விதத்தில் கலவரங்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் கொண்டு போய்விட்ட பின்னணியை நேர்மையுடன் அலசுகிறது, பதிவு செய்கிறது.
ஒரு கழுகுப் பார்வையாக சம்பவங்களின் கோர்வையை நம்முன் வைக்கிறது. அந்த விதத்தில் இந்த நாவல் ஒரு நம்பகமான ஆவணமாகவும் இருக்கிறது.
குண்டு வெடிப்புக்குப் பலகாலம் முன்பே இஸ்லாமியர் வாழும் பகுதிகள் திறந்தவெளிச் சிறைகளாக மாற்றப்பட்டதையும், அதன் காரணமாக தீவிரம் பெற்ற இயக்கங்களையும் துல்லியமாக நம் முன்வைக்கும் அதேநேரத்தில் குண்டு வெடிப்பால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது மௌனத்தின் சாட்சியங்கள்.
மௌனத்தின் சாட்சியங்கள் சம்பவங்களை உணர்வுப்பூர்வமாகப் பார்ப்பதோடு நில்லாமல் தவிர்க்க முடியாத விதத்தில் கலவரங்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் கொண்டு போய்விட்ட பின்னணியை நேர்மையுடன் அலசி பதிவு செய்தது.
ஒரு கழுகுப் பார்வையாக சம்பவங்களின் கோர்வையை நம்முன் வைத்த விதத்தில் இந்த நாவல் ஒரு நம்பகமான ஆவணமாகவும் இருக்கிறது.
இந்நூல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அதனை வாசித்தவர்களின் கருத்துக்களை கொண்டு அறியலாம். அந்த வகையில் இந்த நூல் மௌனத்தின் சாட்சியங்களை வாசித்து முடித்தவர்களின் சாட்சியங்களின் தொகுப்பாகும் !
நூல்களை புதினம் வடிவில் எழுதி மக்களுக்கு விருந்து படைப்பது எழுத்தாளர்கள் எல்லோராலும் முடியாது. சுவாரஸ்யம் நிறைந்த வாசிப்பை தூண்டுவதே புதினங்களின் தனிச்சிறப்பு. ஹஸன் அவர்கள் எழுதிய சிந்து நதிக்கரையினிலே போன்று 'யமுனை நதிக்கரையில்' என்ற இந்த நூலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதோடு வாசிக்க சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது இந்த நூலின் தனிச்சிறப்பு.
நூலாசிரியர் இப்னு முஹம்மது அவர்களின் இந்த நன்முயற்சி தொடர வேண்டியது காலத்தின் கட்டாயம். முகலாய மாமன்னர் ஔரங்கசீப் குறித்த பெரும்பாலான நூல்கள் அவரைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தையே மக்கள் மனதில் திட்டமிட்டு விதைத்துள்ளன. அந்த தவறான கண்ணோட்டங்களை தகர்த்து தவிடுபொடியாக்குகின்றது இந்நூல்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னாளபட்டி எனும் ஊரில் இராமசாமி மகமாயி அம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக 1959-இல் பிறந்தவர் இளங்கோவன் என்ற யவனிகா ஸ்ரீராம். கடந்த முப்பது ஆண்டுகளாய் தமிழ் நவீன கவிதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருகிறார். வணிகமும் விவசாயமும் சார்ந்த குடும்பமெனினும் பல்வேறு நிலங்களில் பயணிக்க நேர்ந்ததில் சேகரித்த மொழியே எனது பிரதிகள் எனும் இவர், தொடர்ந்து சிற்றிதழ்களில் கட்டுரைகள், விமர்சனங்களை எழுதி வருகிறார். தமிழ் படைப்புலகில் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் யவனிகா ஸ்ரீராம் படைப்புலகத்தையும் அதற்குப் பின்னால் இயங்கும் பார்வைகளையும் அறியும் வகையில் ஷங்கர்ராமசுப்ரமணியன் இந்த நூலை தொகுத்துள்ளார்.
முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டுவிட்டன. பூர்வ நிலங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மக்கள் உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் காலம் இது. அந்த நிலைமைகளை கவிஞன் யவனிகா ஸ்ரீராமைப் போலத் தமிழில் கலையழகுடனும் தீர்க்க தரிசனத்துடனும் உரைத்த ஒரு மார்க்சியக் கவிஞன் வேறு யாருமில்லை.
யவனிகா ஸ்ரீராமின் ஆளுமையையும் அவரது உலகத்தையும் தெரிந்துகொள்ள ஒரு சிற்றண்டம் போல இந்த நூல் வாசகருக்கு உதவக்கூடியது.
“பதிமூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் “யாரும் அற்ற" சீடனொருவனுக்கும் “யாவும் ஒன்று” என்பதை, தன் மார்க்கமாகக் கொண்ட ஆசானொருவருக்கும் இடையே நடைபெற்ற வாழ்வியல், தத்துவ பரிமாற்றத்தின் நூற்றியெட்டு பதிவுகள் இவை. பழந்தமிழ் மரபின் ஆசான்/சீடன் உறவு, சமஸ்கிருத ஆசாரத்தின் பிரஷ்நோத்தர் விதி, அரபுலகின் மசலா வடிவம், ஜென் மரபின் சென்ஸாய்/ ஓஷோ பாரம்பரியம் கலந்த நீட்சியாகவும் அதினின்றும் முயங்கி தனித்ததோர் வடிவம் கண்டடைந்தவை இந்த உரையாடல்கள். எளிமையாக.... ஓர் உரையாடல் பிரதி... நம்மோடு உரையாடும் பிரதி...