இன்று உலகளவில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குரிய முக்கியமான விஷயமாகக் கருத்துரிமை முன்னிற்கிறது. நூல்களைத் தடை செய்வது, எரிப்பது, நூலாசிரியர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, கொலை செய்வது பரவலாக நடக்கிறது. அது மட்டுமல்ல, ஊடக வெளியில் தெரிவிக்கப்படும்...
நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின்...
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக்...
விண்ணிலிருந்து புவிக்கு வருபவர்கள் புனைவிற்கு புதியவர்களல்ல, ஆனால் காலந்தோறும் அப்புனைவுகளுக்கான தேவை வேறு ஒன்றாக இருக்கிறது. நவீன மொழியில் பல்மதத்தன்மை (Syctretic) கொண்ட ஒரு பாத்திரத்தை படைப்பது அரசியல் ரீதியான சவாலாகவும் ஆகிட, அரசியலின் பொருட்டே அதனைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். அதே நேரம் எர்தா ஒரு சுவாரசியமான நாவலாகவும் வந்துள்ளது.
உள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி ‘எழுக, நீ புலவன்!’. முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம் பெறாத செய்திகளைப் புதிய...
எழுத்தாளர் என்ற நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சமகாலச் சூழலின் வரலாற்றுப் பிரதிநிதியாகவே பார்க்க விரும்புகிறேன். ஆர்வத்தின் காரணமாகவோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ எழுத வந்தவர் அல்லர் என்பது என் கணிப்பு. ‘சொல் என்பது செயல்’...
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள்...
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள்...
பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடுபாடோ நம்பிக்கையோ இல்லை என்று முருகனும் ஒரு நேர்காணலில் சொல்கிறார். அவர் தன் கதைக் கிராமங்களை ஒரு விசேஷமான இடத்தில், நிலையில் வைக்கிறார். அதாவது அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்ளோ அல்லது ஞாபகங்களிலோ அல்லது உணர்விலோ கிராமங்கள் உள் பொதிந்து வைக்கப்படுகின்றன.
-பா.வெங்கடேசன்
போருக்குப் பிந்தைய ஈழச் சமூகம் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் பழம் பெருமைகளை அசை போடுகையில் அதில் மீண்டும் சாதி, தீண்டாமை ஓர்மைகளுக்கும் ஒரு இடம் இருப்பதையும் இதை எதிர்கொள்ள இப்போதும் தீண்டாமை ஒழிப்பு குறித்த பிரக்ஞை மற்றும் செயல்பாடுகளின் தேவை உள்ளதையும், ஆனால் அது உறுதியாகப் பழைய வடிவில் இருக்க இயலாது என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு அடையாளப்படுத்தவும் செய்கிறார் இந்நூலாசிரியர் யோகராஜா - அ. மார்க்ஸ்
தன் வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டியாக விளங்கிய பதினொன்று ஆசான்களைப் பற்றிய நினைவுகளை இந்தப் புத்தகம் மூலமாக திரு. பி. ஏ. ராமசந்திரன் பகிர்ந்தளிக்கிறார். வியாசர் முதல் குமாரன் ஆசான் வரை நீளும் இந்த வரிசையில்...