காலம் என்பது பொன் போன்றதல்ல; மாறாக உயிர் போன்றது. காரணம், பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் – உயிர் இருந்தால். ஆனால் உயிரே போனால்… ஆம்! காலம் உயிரைப் போன்றதுதான். என்ன விலை...
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 2020 எழுதப்பட்டவை. கோவிட் 19 ஊரடங்கில் ம.நவீன் தொடர்ச்சியாக எழுதிய இக்கதைகள் மலேசிய நிலத்தின் அசாதாரண அனுபவங்களைப் புனைவுகளாக்கியுள்ளன. அவரது முந்தைய தொகுப்புகளான மண்டை ஓடி, போயாக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இக்கதைகள் தனக்கான புதிய சாத்தியங்களை அந்தந்த புனைவுகள் வழியே வடிவமைத்துக்கொண்டுள்ளன. விலங்குகளும் பறவைகளும் ஓடித்திரியும் இக்கதைகள் முழுவதும் அறிவும் அதற்கு புரியாத வெவ்வேறு சந்தர்ப்பங்களும் முயங்கிக்கிடக்கின்றன. அதுவே வாசகர்களின் அகலாத கவனத்தை மேலும் தீவிரமாக்குகிறது.
#Metoo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள் அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல...
மனிதர்கள் எல்லோருக்குமே இரண்டு முகங்கள் உண்டு. எம்முகத்தைக் காட்ட வேண்டுமென்பதில் உள்ள தேர்வே நமக்கு ‘இத்தகைய மனிதன்’ என்ற அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சமயங்களில் நம் பிடியில் இருக்கும் தேர்வு, அசாதாரண சந்தர்ப்பங்களில் கை நழுவிவிடும். அசாதாரண நேரங்கள் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கலாம். தனியாக இருக்கும் போது ஒழுங்காக இருக்கும் மனம் கூட்டமாக சேரும்போது வேறொன்றாகிவிடும். அல்லது கூட்டமாகவே இருக்க பழக்கப்பட்ட மனம் தனியாக இருக்கும்போது முழுவதும் மாறி நிக்கும். இவைப்போல் இல்லை நான் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பவன் என்று ஒருவர் சொல்லலாம். அவரின் அன்றாடங்களில் எவ்வித மாற்றங்கள், இடையூறுகள் ஏற்படாதவரை அவர் சொல்லியது சரியாக இருக்கும். எப்போது அதில் ஒரு அடி விழுகிறதோ அப்போது அவரே நம்ப முடியாதவண்ணம் அவர் மாறத்தொடங்குவார். அப்படி ஒருவரின் கதைதான் சுரேஷ் ப்ரதீப்பின் ‘உடனிருப்பவன்’ கதை.
- எழுத்தாளர் சங்கரன்
தெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவன் எழுதியுள்ள இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜூஸ், கஞ்சி...
வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி – பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும்...
கவிதை, நாவல், சிறுகதை, திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. கவிதை எப்போது வாசகனுடனான உறவைப் பூர்த்தி செய்கிறது, கவிதை உணர்வு நிலைக்கும் அறிவு நிலைக்கும் கவித்துவ...
மிகவும் மதிக்கப்பட வேண்டிய போராளியாகவும் எழுத்தாளராகவும் கலகக்காரியாகவும் இடையறாது இயங்குபவர் ஸர்மிளா ஸெய்யித். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்களின் பிற்பாடு இலங்கை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட தீவிரமான இனவாத அரச...
பதின்பருவத்தில் வளர்ச்சிதை மாற்றம் கொள்ளும் உறுப்புகள் தொடங்கி, கருமுட்டை நிற்கும் காலம் வரை பெண் உடல் இயக்கத்தில் எத்தனையோ குழப்பங்கள், குளறுபடிகள், கோளாறுகள் நம் சமூகத்தில் நிலைபெற்றுள்ளன. அதை ஆரோக்கிய நோக்கில் அணுகி, களையும் முயற்சிகள் வெகு குறைவே . குறிப்பாக, இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய வாழ்வியல் நோக்கில், பெண் தன்னைத் தானே செம்மைப் படுத்திக் கொள்வதில் சரியான வழிகாட்டல் போதாமை உள்ளதை மறைக்க முடியாது. அதை களைகிறது இந்த நூல். பதின்பருவம், பேறுகாலம் ஆகிய கட்டங்களில் பெண்களின் ஆரோக்கியத்தை சுயமாக பேணிக் கொள்ளும் ஆலோசனைகளை இந்த நூல் கொண்டுள்ளது. இது சுயமருத்துவ நூலல்ல. பெண்களின் உடல்நலத்தில் அக்கறைக் கொள்ளும் ஆலோசனை அல்லது வழிகாட்டி நூல் என கொள்ளலாம். தாயாய், மனைவியாய், சகோதரியாக, மகளாக வாழும் அனைவருக்கும் இந்த நூல் சேர வேண்டும்.
‘உய்யடா உய்யடா உய்!’ நூல் தலைப்பு விசிலடிக்கும் இளைஞன் ஒருவனின் உற்சாகசத்தத்தை நினைவூட்டலாம். ஆனால் அது உண்மையில் பட்டினத்தார் பெண் விழைவிலிருந்து விலகவிடுக்கும் கடும் எச்சரிக்கை. இன்றைய இளைஞரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்து இலக்கியப்...
கதைக் கருக்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல் திரைக்கதைகளை பார்ப்பதற்கு மட்டும அல்ல.அதனை அவதனித்து வாழ்வியல் கூறுகளை சொல்ல விழையும் நல்ல திரைக்கதைகளை வேறு ஒரு கோணத்தில் சிந்திக்க மனிதன் முயன்றால் வாழ்வியல் கூறுகளை.எளிமையாக உணர்வதற்கு இந்த நூல் உதவும்.
இந்தப் புத்தகத்தில் எஞ்சின்கள் மீதான என் காதலை கொஞ்சம் உங்களுக்கும் கடத்த முயன்றிருக்கிறேன்.
உண்மையில் வாகனம் எஞ்சின் வடிவமைப்பு இதெல்லாமே எக்கச்சக்க கணிதமும் சமன்பாடுகளும் புழங்குதிற துறை. சில சமன்பாடுகள் எனக்கே புதிதுதான். ஆனால் அவை புரியாமல் போனது அவைகளின் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில் தடையாக இல்லை.