கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த...
தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன்...
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும்...
சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’. தனது தாயின் வாழ்க்கை குறித்து கமலா ராமசாமி எழுதியுள்ள நூல்...
ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபான்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றாள். வாய்மூடி அமைதியாக இருக்க மறுத்து, தன் உரிமையான கல்விக்காக மலாலா யூசுஃப்ஸை போராடினாள். 2012 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி செவ்வாயன்று இப்போராட்டத்திற்குக்...
தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில்...
மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை, கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார்....
இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 – 1956), ‘தீண்டத் தகாதவராக’...
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டுவிட்டது என்று...
இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஸாத்காவுன் என்ற கிராமத்தில் பிறந்தார் நாம்தேவ் நிம்கடே. பெற்றோர் நிலமற்ற அடிமை வேலையாட்கள். 14 வயதில் நாம்தேவ் தமது கிராமப் பள்ளியில் சேர்ந்தார். தீண்டப்படாதவர் என்பதால் வகுப்புக்கு வெளியே வெயில்...
ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் உழலும் மகளிரில் சிலர் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளக் காரோட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அனுபவப் பதிவுகளே ‘பெண் டிரைவர்’ என்ற இந்நூலின் உள்ளடக்கம். இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பன்னிரண்டு பெண்களின் கதைகள் தொழிலில்...