சுகிர்தராணியின் ஆறாவது தொகுப்பு இந்நூல். தனது முந்தைய ஐந்து தொகுப்புகளிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வீச்சுடன் முன்னேறிச் சென்றிருக்கும் சுகிர்தராணி ‘இப்படிக்கு ஏவா’ளில் உச்சத்தை எட்டியிருக்கிறார். அதைவிடவும் அதிஉச்சத்தை எட்டும் கவிதைகள் வரக்கூடும் என்ற நன்னம்பிக்கையையும்...
இலங்கையில் 2009 அழிவிற்குப் பின்னான, மீந்துபோன மனிதர்களின் வாழ்வைக் குறித்துப் பெரும் ஏக்கத்துடன் கவிதைகளை முன்னிறுத்துகிறார் கருணாகரன். இயக்கங்களின், மனிதர்களின் வீழ்ச்சியைக் கவிதைகளில் முக்கியப் பேசுபொருளாக்கியிருக்கிறார். போரும் அவற்றின் உற்பத்திகளும் சாட்சியங்களும் அவரிடம் கவிதைகளாக...
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு...
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன.
1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பேரலையாக எழுச்சிபெற்றது ஊர்வசி அதன் முக்கியப் பங்காளிகளுள் ஒருவர். பள்ளி மாணவியாக இருந்த காலத்திலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார். அப்போதே ‘புதுசு’...
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற...
சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக் குரல் றஷ்மியுடையது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வை’ச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின்...
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி...
சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின்...