சமூக வலைதளங்களின் உபயத்தால் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்கள் பொதுவெளியில் பெருகிவிட்ட காலம் இது. பெரும்பாலான படங்களைப் பற்றிய அலசல்களும் தீர்ப்புகளும் படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே வெள்ளமாகப் பெருகும் காலம். இவ்வளவு தெறிப்புகளுக்கு மத்தியில்...
பல நூற்றாண்டுகளுக்கு முன் செய்யுள் வழக்கை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட இலக்கண விதிகளையே தமிழ்மொழியின் பயன்படு தன்மைக்கான அளவுகோலாக முன்னிறுத்துகிறோம். இது உரைநடைக் காலம். அதற்கேற்பத் தமிழ் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு நவீனமாகி வருகிறது. எழுத்து...
தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம். நான் இல்லாவிட்டால்...
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின்...
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன....
சமகாலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை. நூல்கள், படைப்பாளிகள், இலக்கியப் போக்குகள் ஆகியவற்றினூடே பயணிக்கும் அரவிந்தனின் அணுகுமுறை படைப்பின் ஆதார சுருதியையும் படைப்பாளுமைகளின் ஜீவனையும் ஸ்பரிசிக்க முயல்கிறது....
சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் இளைஞன் ஒருவன் முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் கதை இது. இந்து மத ஆசிரமம் ஒன்றைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்நாவல், அதன் மேன்மைகளையும்...
மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களது பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறது. இந்தச் சாம்பல் நிற உலகத்தில்...