கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை. யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார் . . . ஒரு கவிதைத்...
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி...
‘உய்யடா உய்யடா உய்!’ நூல் தலைப்பு விசிலடிக்கும் இளைஞன் ஒருவனின் உற்சாகசத்தத்தை நினைவூட்டலாம். ஆனால் அது உண்மையில் பட்டினத்தார் பெண் விழைவிலிருந்து விலகவிடுக்கும் கடும் எச்சரிக்கை. இன்றைய இளைஞரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்து இலக்கியப்...
இளம் கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப்போன குரூரங்களின் முன் ஒரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை...
“கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள் அவர் சுட்டிக்காட்டும் பலதும் நம்மையும் பரவசம் கொள்ளச் செய்கின்றன”.
நவீன தமிழ்ப் படைப்பாளிகளில் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு உரைநடை இலக்கியத்தில் அவர் செலுத்தும் தீவிரம். சங்கப் பாடல்களினுள்ளும் நீதிநூல் களிடத்தும்...
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப்...