நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் ஞாபகப் புத்தகம் ‘இஸ்தான்புல்’. தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூரும் இந்நூலில் பாமுக் தனது இளமைப் பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறார். இளம்பருவத்திலேயே...
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும்...
கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஒரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்போரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால்...
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும்...