உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற...
“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்” * முன்னாள் ராணுவத்தினனான ஹெர்வே ஜான்கர் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசியான ஜப்பானுக்குப் போகிறான்.
ஜஹனாரா பேகம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானுக்கும் அவரது அதீத நேசத்துக்குரிய மனைவி மும்தாஜ் மஹலுக்கும் பிறந்த குழந்தைகளில் மூத்தவள். பதினான்கு வயதிலேயே தந்தைக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் நுண்ணறிவு அவளுக்கு இருந்தது. பாரசீக நூல்களில்...
தி. ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு ‘மோகப் பெருமயக்கு’. ஓர் எழுத்தாளர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துகளில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல்...
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல்புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது.மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரிசும் அவர் மட்டுமே. இந்த்த் தன்மையை இனங்கண்டுதான் அவரைச் சிறுகதையின் திருமூலர்...
வெல்லிங்டன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவத் தேவைகளுக்காக 1852 – 1860 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஊர். இந்த வரலாற்றுப் பெருமையைத் தவிர தனிப்பட்ட முக்கியத்துவம் இல்லாத இடம். இன்றும் ராணுவத் தளத்தை வைத்தே ஊர்...
இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார்....