ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற...
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை...