மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.
தீவிரமான பாலியல் பிரக்ஞை கொண்ட பெண், ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறிகொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலைவாய்ப்பின் பொருட்டு அவமானத்தை வலிந்து ஏற்கும் இளம் கணவன், சக்களத்திகளாகி மோதிக்கொள்ளும் தாயும் மகளும் என வாழ்வின்...
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும்...