கவிதை, நாவல், சிறுகதை, திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. கவிதை எப்போது வாசகனுடனான உறவைப் பூர்த்தி செய்கிறது, கவிதை உணர்வு நிலைக்கும் அறிவு நிலைக்கும் கவித்துவ...
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய...
குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது....
பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர்...
காதலில் ஆண் ஒரு பயணி. பெண்ணைப் பற்றிக்கொண்டு பிராயங்களின் விளிம்புகளில், பிறவிகளின் புதிர்களில், கனவுகளின் உலகில், நிலங்களின் விஸ்தீரணங்களில் அலைந்துதிரியும் ஒரு வெறிகொண்ட பயணி. பெண் காதலில் ஒரு நிலை. அவள், அதில் ஒன்று...