மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும்...
இஸ்லாமிய சமூகத்தின் இருவேறு உலகங்களின் இயல்புகளைச் சொல்லுகிறது மீரான் மைதீனின் நாவல். பொருளாசையும் தரித்திரமும் கொண்ட இருவேறு மனித இயற்கைகளின் மோதலில் முன் நகர்கிறது இதன் கதையோட்டம். காணும் செல்வத்தையெல்லாம் தன்னுடைய தாக்கிக்கொள்ளும் ஹமீதுசாகிபு....
ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும்...