பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு களில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிட...