அத்தியாயம்-12
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
அத்தியாயம்-8
அத்தியாயம்-9
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
பிரியாவை பார்த்தவுடன் ஒரு கணம் திடுக்கிட்டார் மூர்த்தி.
“சின்னப் பொண்ணு நீ. எவ்வளவு வேதனைய தான் தாங்குவேனு தான் சொல்லல” கௌரி சொன்னாள்.
“உங்களுக்குச் சந்தோசம் வர்றப்ப என்னை விட்டுட்டு கொண்டாடுவீங்களாப்பா”
“இல்லம்மா”
“பின்னே கஷ்டத்துல என்னையும் சேர்த்துக்குங்க”
“நான் பட்ட அவமானம் இது. எப்படிம்மா சொல்வேன்”மூர்த்தி சோர்வாய் பதிலளித்தார்.
“எது எப்படியோ யாரோ எடுத்துகிட்ட பணத்துக்கு நாம தண்டனை அனுபவிக்கும்படி ஆகிடுச்சு. என் கல்யாணத்துக்காக சேர்த்து வைக்கிறீங்களே. நகை அதை வித்து இதை அடைக்க பாருங்க. இதிலேருந்து நீங்க வெளி வந்தே ஆகணும்.”
“நகையினால அவ்வளவு பணம் புரட்ட முடியாதும்மா.”
மதன் சொன்னான்.
“அதெல்லாம் வேண்டாம். இந்த விசயத்தை நான் கண்டுபிடிக்க பார்க்கிறேன். அந்தப் பக்கம் எங்கப்பா… இந்தப்பக்கம் உங்கப்பா. ரெண்டு பேர் பக்கமும் நியாயமிருக்கலாம். அது எங்கே போச்சுனு கண்டுபிடிச்சிட்டாலே உங்கப்பா மேல இருக்கிற கெட்ட பேர் மறைஞ்சிடும்.”
“உங்கப்பா போலீசுக்கு போயிருப்பாரே. எப்படி விட்டாரு..?”
“கணக்கில் வராத பணமா இருக்கலாம். எதுவா இருந்தாலும் நான் இங்கேருந்து கிளம்பறதுக்குள்ள கண்டு பிடிக்க பார்க்கிறேன்.” உத்தரவாதமளித்தான்.
“தம்பி நீங்க எனக்காகப் பண்ற உதவிக்கு என்ன கைமாறு பண்ண போறேன்.”
“தேவைப்பட்டா கேட்கிறேன் ” என்றவன் பிரியா பக்கம் திரும்பி ” சரி பிரியா நாளைக்கு மாலை தானே உங்க ஸகூல் பங்சன்.”
“எஸ் சார்.அஞ்சு மணிக்கு”
“விக்கி. நாளைக்கு மதியம் கொஞ்சம் ஞாபகப்படுத்துடா. பேசறதுக்கு கொஞ்சம் பிரிப்பேர் பண்ணனும்.”
*******
மறு நாள் காலை மதனின் அம்மா போன் செய்தாள். பால்கனியில் நின்றபடி காபி குடித்து கொண்டிருந்தவனிடம் விக்கி கொண்டு வந்து கொடுக்க, ஸ்பீக்கரில் போட்டு பால்கனி சுவரில் வைத்த படி, “என்னம்மா” என்றான்.
“நீ இப்ப ஒரு செலிபிரிட்டி. வெளி இடங்கள்ல பேசறப்ப கொஞ்சம் பார்த்து பேச மாட்டியா..?”
“ஏன் என்னாச்சு..?”
“நியூஸ் பாரு. உங்கப்பா இங்க கத்திகிட்டே இருக்காரு”
டேய் டிவி போடு என்றபடி உள்ளே அறைக்குள் வந்தான்.
ஓடி கொண்டிருந்த மியூசிக் சேனலிலிருந்து நியூஸ் சேனலுக்கு விக்கி மாற்றினான்.
செய்தி முகத்தில் வந்து அறைந்தது.
‘இப்படி மாட்டிகிட்டீங்களே மதன்’ இது டைட்டில். மதன் முகம் குளோசப்பில் டிவி முழுதும் தெரிய பிண்ணணியில் செய்தி வழங்குபவரின் குரல் ஒலித்தது.
‘சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும். இதன் பெயர் காதல் திரைப்படத்தில் மறைமுகமாக நடிகர் பிரதீப்பை தாக்கும் விதமாக காட்சி வைக்கப்பட்டிருப்பதாக அவரது ரசிகர்கள் கண்டன குரல் எழுப்பியிருந்த நிலையில் அது பிரதீப்புக்காக வைக்கப்பட்ட காட்சி தான் என்பதை பிரதீப்பின் ரசிகர்களிடம் மதன் சொல்லும் வீடியோ வைரல் ஆகியிருக்கிறது…’
ஹோட்டலில் மதனிடம் பிரதீப் ரசிகர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒலிபரப்பாக ‘ஆம் பிரதீப்பை மனசுல வச்சு தான் அந்த காட்சி வச்சேன். அதுக்கென்ன இப்போ’ என்று மதன் சொல்வது மட்டும் திரும்ப திரும்ப ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.
விக்கி மதனை பார்த்து உதட்டை பிதுக்கினான். மதன் டென்சனாகி தலைமுடியை கோதினான்.
“டேய். நிஜமாகவே அந்தாளை சொல்ற மாதிரியாடா சீன் வச்சேன்”
“இல்லடா. “
“பின்ன ஏன்..? ச்சைக்… நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டு இருக்கோம். ஏன் இப்படி பண்றாங்க”
“டி ஆர்பி… சரி இதுக்கு என்ன பதில் கொடுக்க போறே.”
“தெரியல. ” அலுத்து கொண்டான்.
” இத பாரு மீடியாலேருந்து போன் வர ஆரம்பிச்சிடுச்சு.” விக்கி செல்போன் காண்பித்தான்.
“உங்க பதில் என்னனு கேட்பாங்க. நாம அவங்க டார்ச்சர் தாங்க முடியாத தான் அப்படி சொன்னேன்னு சொன்னாலும் அத ஏத்துக்க மாட்டாங்க.”
“பின்ன மன்னிப்பு கேட்கலாம்கிறியா… நெவர்.” மதன் உறுதியாக சொன்னேன்.
அன்று முழுதும் முழுக்க தனது ஸ்கிரிப்ட் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்த முயற்சித்தும் முடியாமல் திணறினான். விக்கிதான் அம்மா, அப்பா , மீடியா நண்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி அலுத்துப் போய்க்கொண்டிருந்தான்.
மதன் மீடியாவிடம் சிக்கி கொள்ளும் நேரமும் வந்தது.
மதனின் உதவி இயக்குனர்களோடு அடுத்த படத்திற்கான டிஸ்கசன் பண்ண வேண்டியிருந்ததால் , பிரியாவின் பள்ளி ஆண்டு விழாவிற்கு அன்று மாலை மதன் மட்டும் காரில் வந்திறங்கினான். மீடியா மொத்தமும் அவனை மொய்த்துக் கொண்டார்கள்.
“சார்… நீங்க பிரதீப் பத்தி சொன்னத வாபஸ் வாங்கிக்க போறீங்களா… இல்ல அதுலேயே உறுதியா இருக்க போறீங்களா..?”
“பிரதீப்பை பகைத்து கொண்டு தமிழ் திரையுலகில் நீடிக்க முடியாதுனு ஒரு கருத்து இருக்கு. அதப்பத்தி என்ன நினைக்கறீங்க..?”
“உங்களுக்கும் பிரதீப்புக்கும் அப்படி என்ன தான் பிரச்னை… முன் விரோதம் எதுனா இருக்கா..?”
“பிரதீப்புக்கு இணையா போற்றப்படும் நடிகர் கண்ணனோட ரசிகரா நீங்க… இல்ல அவரோட ரசிகர்கள் எதுனா இப்படி சீன் வைக்க சொல்லி உங்களைப் பயன்படுத்தறாங்களா..?”
மதன் எல்லா கேள்விகளையும் உள்வாங்கி கொண்டவன் பதற்றத்தை மறைத்தபடி புன்னகைத்தான்.
என் படத்துல ஒரு ஷாட். ஒரு சில வார்த்தைகள் அது இவ்வளவு பெரிய பிரச்னைய கொடுக்குமா..? கேள்விகளை அடுக்குமா..? எனக்கு ரொம்பவே ஆச்சரியமாயிருக்கு.”
“வெளியில பேசறப்ப பார்த்து பேசணும் இல்லீங்களா” பத்திரிகையாளர் ஒருவர் சிரித்தபடி சொன்னார்.
“ஓ. அப்படியா. அப்ப நான் எத சொன்னாலும் இந்த பிரச்னை இன்னும் விவாதத்தை தான் கிளப்பி விடும். சோ நோ கமெண்ட்ஸ்.” என்றபடி கை கூப்பி விட்டு நகர்ந்தான்.
“நீங்க விவாதத்தை கிளப்பற மாதிரி ஏன் பேசறீங்க..?”
நகர்ந்தவன் நின்றான்.
“நீங்க ஏன் ஒண்ணும் இல்லாத விசயத்தை விவாதமா ஆக்கறீங்க..?”
” யாரு நாங்களா..?” என்றபடி ஒரு பத்திரிகையாளர் கோபமாய் முன்னே வர மதன் சொன்னான்.
“நாட்ல மக்களுக்கு இந்த பிரச்னை தான் முக்கியமா?”
“பிரதீப் ரசிகர்கள் புண்பட்டிருக்காங்களே. “
“அஞ்சு வருசம் முன்னணி பிரதீப்போட சூபபர் ஹிட் படத்துக்கு அவர் நடிப்பை பாராட்டி ஒரு பதிவு முகநூல்ல மூணு மணி நேரம் செலவு பண்ணி எழுதியிருந்தேன். யாருமே கண்டுக்கல. ஆனா இப்ப ஒரு சாதாரண விசயத்தை அவங்க தப்பா எடுத்துகிட்டு எதிர்க்கிறாங்க. பிரச்னைக்குரிய அந்த காட்சில இன்னும் சில நடிகர்களோட போஸ்டர்களும் தான் இருக்கு. அவங்கலாம் சண்டைக்கு வரலியே. “
“வரணும்கறீங்களா..?” பத்திரிகையாளர் விடாமல் தூண்டில் போட்டார்.
“இதென்ன விதண்டாவாதம். அப்ப அவங்களும் வரணும்னு நீங்க கிளப்பி விடறீங்களா.?”
“சார். நாங்க ஏன் சார் அப்படி சொல்ல போறோம்..?. மக்களுக்கு விசயத்தை கொண்டு போய் சேர்க்கிறது தான் எங்க வேலை”
“ஓகே. அதான் வீடியோவோட போட்டுட்டீங்கல்ல. மக்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அப்புறம் ஏன் இந்த கொஸ்டின்ஸ் ?”
திரும்ப எதையோ அவர்கள் கேட்க வர “நன்றி அப்புறம் பார்க்கலாம்.” என்றபடி படிக்கட்டுகள் ஏற ஆரம்பித்தான்.
அவர்களிடம் விவாதத்தில் ஈடுபட்டது அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. ஆகவே திரும்பி நின்றபடி சொன்னான்.
“என் அடுத்த படத்தோட ஹீரோ கேரக்டர் என்ன தெரியுமா?”
எல்லோரும் சுறுசுறுப்பாகி ஆர்வமாய் “சொல்லுங்க “என்றார்கள்.
“ஒரு ஜர்னலிஸ்ட்தான் என் ஹீரோ. உங்க பிரச்னைகளை தான் படம் பேச போகுது”
“சூப்பர் சார்.” என்று சிலர் சொன்னார்கள்.”இத சொல்லி எங்களை சமாதானப்படுத்த பார்க்கறீங்களா.” ஒருவர் கிண்டலடித்தார்.
மதன் சொன்னான். ” எல்லாரையும் திருப்திபடுத்தறது கடவுளாலே கூட முடியாது. நான் எம்மாத்திரம்”
சரச்சரவென்று படிக்கட்டுகள் ஏறி வந்தவனை, பிரியா பள்ளியில் உள்ள ஆசிரியைகள், மாணவ மாணவிகள் வரவேற்றார்கள்.
பிரியா சிம்பிளான அலங்காரத்திலும் இன்னும் அழாகாக தோற்றமளித்தாள்.
ஆடிட்டோரியத்திற்கு அவனை அழைத்து சென்றார்கள். எல்லோரும் எழுந்து வணக்கம் சொல்ல மதன் கை கூப்பிச் சிரித்தபடி வந்தான்.
மேடையில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டான்.
மதனுக்கு முகமெங்கும் வியர்த்திருந்தது.
கைக்குட்டையை எடுக்க, பேண்ட் பாக்கெட்டில் கை விட்டான். இல்லை. காரிலேயே வைத்து விட்டு வந்திருப்பது அப்போது தான் ஞாபகத்துக்கு வர, தன் விரலால் நெற்றி வியர்வையை துடைத்து சுண்டினான்.
மதனின் அவஸ்தையை கவனித்த பிரியா தன் ஹேண்ட்பேக் திறந்து சிறு டவல் எடுத்து கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.
மதன் தேங்க்ஸ் என்றபடி அந்த டவலை வாங்கி கொண்டான்.
ரோஸ் மில்க் கலரில் இருந்த அந்த டவலில் ‘For Yours Only’ என்ற வாசகங்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்க , அது மதனின் கவனத்தை கவர்ந்தது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.