மறைந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், சில ஆண்டுகள் முன்பு மறைந்த தஞ்சை ப்ரகாஷைப்பற்றி எழுதிய கட்டுரையைத் துவக்கமாக வைத்து இக்கட்டுரை நூல் தொடங்குகின்றது.. இதுவரை வெளிவராத கட்டுரைகள் இதனுள்ளே இருப்பதை புத்தகத்தின் அட்டை நமக்குச்சொல்கிறது.
என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள் பற்றி மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும் முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு எலக்ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம் அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில் அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.
அதம்பை வை. இராமமூர்த்தி தனது முன்னுரையில்’ பல மொழிகளை ஒருவரே கற்று அந்த மொழிகளிலுள்ள படைப்புகள் பலவற்றை வாசித்து,அதனை நேரடியாகவே மொழிபெயர்த்த சாதனையைப் படைத்திருப்பவர் தஞ்சை ப்ரகாஷ் என்பதை அறியும் போது அவரின் மொழியறிவை வியக்காமல் இருக்கமுடியவில்லை என்று குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.