1908ஆம் ஆண்டில் கிரீன் கேபிள்ஸ் ஆனி வெளிவந்தது. அது தான் ஆசிரியர் எல்.எம்.மாண்ட்கோமெரியின் முதல் நாவல். அது அவருக்கு மிகுந்த புகழைத் தேடி தந்தது. புகழ்ப் பெற்ற பாத்திரமான ஆனி ஷெர்லியை வைத்து மேலும் ஏழு நாவல்கள் எழுதி உள்ளார். எல்.எம்,மாண்ட்கோமெரியின் எழுத்தாற்றல் ஆனியை நம் நெஞ்சில் வாழ வைத்துள்ளது. கிரீன் கேபிள்ஸ் ஆனி திரைப்படமாகவும் வந்துள்ளது.