தமிழ்ப் பனை ஓலைகள் அச்சில் வர ஆரம்பித்த காலத்திலேயே தமிழ்மொழி, பண்பாடு, காலம் குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன. இந்த ஆராய்ச்சியாளர்களில் பலர் சாதாரணமாய் வாழ்ந்தவர்கள். வறுமை, நோயால் தாக்கப்பட்டவர்களும் உண்டு. இவற்றைத் தாண்டி தமிழ் நூற்களை ஆராய்வதையும் பதிப்பிப்பதையும் வேள்வியாகச் செய்தவர்கள் இவர்கள். இப்படியான சிலரின் வாழ்வையும் அவர்களின் புத்தகங்களையும் பற்றிக் கூறுவது இந்நூல். ஆவேசமோ விருப்பு வெறுப்போ இன்றிச் சமகால வாசகருக்குக் கூறும் மிகைப்படுத்தல் இல்லாத நடை, அறிஞர்கள் குறித்த அபூர்வமான சில தகவல்கள். ஓர் அறிஞரை முழுமையாகப் புரிந்துகொள்ளத் தக்க செறிவு ஆகியவை இந்நூலிலுள்ள கட்டுரைகளின் சிறப்புகள்.