Description
கூத்தாட்டு – தமிழ் இசை, இலக்கியம், உலகத் தமிழ் கலாச்சாரம் அனைத்தையும் இணைக்கும் முக்கிய நூல்.
இசை ஆராய்ச்சி மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் இந்நூல்,
அண்ணன் யுகபாரதி, பேராசிரியர் நா.மம்மது மற்றும் எழுத்தாளர் பரிவை சே.குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பால்
படைப்பாக உருவானது.
தமிழின் பெருமையையும் இசையின் ஆழத்தையும் உணர விரும்பும் அனைவரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒரு அரிய சிறப்பு தொகுப்பு.
நூல் ஆசிரியர் பற்றி
நா. மம்மது
தென்காசி மாவட்டம் தென்பாண்டிச் சீமை – பழைய திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள இடைகால், நா. மம்மது இசை ஆய்வாளர் பிறந்த ஊர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார். தமிழ் மொழி, தமிழர் தொன்மை, தமிழா பண்பாடு, தமிழர் கலைகள் இவற்றில் ஆர்வங்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக தமிழ் இசையில்.தமிழக அரசின் பாரதி விருது, உமறுப் புலவர் விருது, எஸ்.ஆர்.எம் பல்கலை விருது, மூன்று வாழ்நாள் சாதனையாளர் விருது, தந்தை பெரியார் விருது உள்ளிட்ட இருபத்தொரு பெருமைமிகு விருதுகளைப் பெற்றவர். இருமுறை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா என வெளிநாடுகளிலும் தமிழிசைப் பரப்பி வருகின்றார். இருநூறுக்கும் மேற்பட்ட இசை ஆய்வுக் கட்டுரைகள், பதின்மூன்று இசை ஆய்வு நூல்கள் எனத தமிழிசைக்கு அணி செய்தவர். மதுரைத் தியாகராசா கல்லூரித் தமிழிசை ஆய்வு மையம் மூலமாக முதன்மை இசை ஆய்வாளராக இருந்து இசைத் திட்டப் பணியாற்றியவர். இசை ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், கருத்தரங்கம், ஆய்வரங்கம், மக்கள் மேடை, தொலைக்காட்சி, இணையம், இசை நிகச்சி எனத் தொடர்ந்து இசைப்பணியாற்றும் ஆசிரியருக்கு அகவை 78.
Reviews
There are no reviews yet.