எனக்கு எந்தத் தடையும் கிடையாது என ஒவ்வொரு தனிமனித மனதுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் கோமாளியை அடையாளங்காண, குறைந்தபட்சம் ஒரு நிலைக்கண்ணாடி அவசியமாகிறது.
நம் மனம் வரையும் ரகசிய சித்திரங்களை, வெளிப்படுத்த முடியாமல் அவஸ்தைக்குள்ளாகும் தவிப்புகளை, வன்ம எண்ணங்களை, நிராசைகளை, பரிகாசங்களை, பாசாங்குகளை, பாவனைகளை, நல்லவன் கெட்டவன் பிம்பங்களை என அத்தனை முகமூடிகளையும் ஒருமுறை அணிந்துகொண்டு…