நாவல் எழுதுதலுக்கும், சரித்திரத்திற்குமிடையே உள்ள வெளியில் தமிழவனின் புனைவுகள் பிறக்கின்றன. ஆகையால் அதர்க்கம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இந்த தர்க்கமழிப்பு என்பது பொருண்மையின் எல்லையை விரிவடையச் செய்கிறது. ஒரு கதையாடவில் நாம் மூழ்கியிருக்கும் தருவாயில் அதை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முறை கேள்விக்குள்ளாகிறது.!
– கவிஞர் எஸ். சண்முகம்