மதம் – அதிகாரம் என்ற இடத்தில் அடையும் மாற்றங்கள் எப்படியான சீரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு சமகால வரலாற்றில் கூட பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. இந்த அதிகாரம் என்பது மேலிருந்து கீழாக ஒரு வகையில் சாதிய படி நிலைகளைப்போலவே இயங்குகின்றது. அதில் எளியவர்கள், அவர்களுடைய குடும்பம், என்பவற்றை மீண்டும் மீண்டும் முட்டிக்கால் போட்டு வாழ்வின் இறுதிவரை நிறுத்தி கொண்டே இருக்கிறது. இவை அத்தனையும் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னே நடந்தாலும் அவை அவருக்கானதல்ல என்பதுதான் பெருந்துயரம். “கர்த்தரே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற குரல் முடிவற்றதாக நீள்கின்றது!.
எந்த கடவுளுடனும் நமக்கு பிரச்சினைகள் ஏதுமில்லை. கடவுளை – மதத்தை பீடித்திருக்கும் அதிகார மையங்களே நம்முடைய சவக்குழிகள்!.
– வாசு முருகவேல்