பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி”. பெரும் வரலாறு படைத்த வரலாற்று ஆசிரியர் கல்கி அவர்களின் படைப்பை அடுத்த தலைமுறை வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் வளரி வெளியீடு மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.