இந்நூல் பற்றி… இந்நூல் முதல் முஸ்லிம் படையெடுப்பாளர் முகம்மது இப்னு காசிமிலிருந்து தொடங்கி கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை பல்வேறு ஆட்சியாளர்களைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. கி.பி.712 முதல் 1857 வரை ஏறத்தாழ 1150 ஆண்டுகால வரலாற்றை இச்சிறு நூல் பதிவு செய்துள்ளது. வடக்கிலிருந்து டெல்லி ஆட்சியாளர்களும், தெற்கிலிருந்த தக்காண ஆட்சியாளர்களும், அரபுகள், பாரசீகர்கள், ஆப்கானியர், துருக்கியர் மொகலாயர்களாகவே இருந்துள்ளனர். இவர்களுக்கு முற்றிலும் மாற்றமான மண்ணின் மைந்தர்கள் ஹைதர் அலீ, திப்பு சுல்தான், மருதநாயகம் ஆகிய மூவர். முஸ்லிம் மன்னர்கள் என்றால் மொகலாய மன்னர்களே என எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் பல புதிய செய்திகளைக் கூறுகிறது. கட்டுரைகளாகத் தொடங்கும் நூல் பல கதைகளையும் ஆங்காங்கு சொல்கிறது. அரண்மனை நிகழ்வுகள், அந்தப்புர நிகழ்வுகள் ஆங்காங்கு இருந்தாலும், முஸ்லிம் மன்னர்களின் போர்க்களங்களும் அவர்களுடைய வெற்றிகளும் சிறப்பாகவே பதிவாகியுள்ளன. அதேபோல் தோல்விகளும் வீழ்ச்சிகளும். சாஜிதா புக் சென்டருக்காக ‘மாவீரன் சதாம்’ ‘கழுகு தேசம்’ ‘காதியானிகள்’ ‘அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு’ ஆகிய நான்கு நூல்களை எழுதியுள்ள தாழை மதியவனின் ஐந்தாவது நூல் இது |