ஆதியில் சொற்கள் இருந்தன
அதற்கு சிறகுகளும் இருந்தன
பசி தாகம் கொண்ட சிறுவன்
பறந்து கொண்டிருந்த ஒரு சொல்லை
நிலத்தில் வீழ்த்திய போது
கடல் நிறைந்தது
அவன் கல்லெறிய கல்லெறிய
தாவரங்களும்
விலங்குகளும்
பறவைகளும்
பல்லுயிர்களும்
வந்தன
யாவும் யாவும் யாவும் அப்படியே வந்தன
நான் நெஞ்சிலிருந்து ஓர் அன்பை எடுத்து
வானில் எறிகிறேன்
அது சொல்லாகிப் பறக்கிறது
எல்லா கவிதையிலும் படர்வது
அதன் நிழலே.
நூல் முழுவதும் இப்படியான கவிதைகளை
ஐந்து தலைப்புகளில் எழுதி இருக்கிறார் நண்பர் இளங்கோ கிருஷ்ணன்