பால்ய நண்பர்களுடன் கோவப்பழம் பறித்து, குயில் தட்டு செய்து மேலக்கட்டுத்திடலில் வெகுநேரம் காத்திருந்து குயில் பிடித்து கொஞ்சி விளையாடி மகிழ்ந்து.. பின் வான்நோக்கி உயரப்பறக்க விடுவோம்.
மார்கழிமாத அதிகாலைப் பொழுதுகளில், வாசல் கோலத்திற்காக பறங்கிப் பூ, பூசணிப்பூ, வெண் தும்பைப் பூ பறிக்கச் சென்றது. வெண்பனி மூட்டத்துடன் கவிதையாய் என்னுள் வாசம் செய்கிறது.
ஊரில் மழை பொய்த்த காலத்தில் ஊர்மக்கள் ஒன்றுகூடி பறையடித்து கொடும்பாவி இழுத்தவுடன் மழை பெய்து வியப்பில் ஆழ்த்திய வாழ்வனுபவத்திலிருந்தே எம்மக்களின் கதைகளை எழுதத் தொடங்கினேன்