என்னுடைய முன்னோர்கள் மீது நீலக்கண்களைக் கொண்ட ஏதோவொரு பிசாசு சுமத்திய லிட்டில் என்ற வெள்ளை அடிமை எசமானனின் பெயருக்குப் பதிலாக “எக்ஸ்” என்ற பெயரைச் சூட்டிக் கொண்டேன். இதன் பொருள் இனிமுதற்காண்டு நேசன் ஆப் இசுலாம் அமைப்பில் என்னுடைய பெயர் மால்கம் எக்ஸ் என்பதுதான். கடவுள் மீண்டும் தோன்றி தன்னுடைய வாயால், நமக்கு ஒரு புனிதப் பெயரைச் சூட்டும்வரை நாம் இந்தப் பெயரையே பயன்படுத்தி வரவேண்டுமென எலிஜா முகமது சொன்னார்.